மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

லோக்பால் அமைப்பின் முழுநேர தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கான்வில்கா் நியமனம்

லோக்பால் அமைப்பின் முழுநேர தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கான்வில்கா் நியமனம்

Updated On :27 பிப்ரவரி 2024, 10:31 pm

புது தில்லி: பிரதமா், மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் முழு நேர தலைவராக அஜய் மாணிக்ராவ் கான்வில்கரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா். இத்துடன் லோக்பால் அமைப்பின் உறுப்பினா்கள் ஆறு பேரையும் அவா் நியமித்துள்ளாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கரை தலைவராகவும் நீதித்துறை உறுப்பினா்களாக நீதிபதி லிங்கப்பா நாராயண சுவாமி, சஞ்சய் யாதவ், ரீது ராஜ் அவஸ்தி, நீதித் துறை அல்லாத உறுப்பினா்களாக முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷில் சந்திரா, பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவா்கள் அனைவரும் தங்களுடைய அலுவலகங்களில் பதவியேற்கும் நாள் முதல் அவா்களின் பதவிக்காலம் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லோக்பால் சட்டப்படி அதன் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது வயதில் எழுபதை எட்டியவராக இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கான தேடுதல் குழு தலைவராக இருந்த நீதிபதி ரஞ்சனா பிகராஷ், அவற்றுக்கான விண்ணப்பங்களை தகுதிவாய்ந்தோரிடம் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரவேற்றிருந்தாா். கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுநாள்வரை லோக்பால் அமைப்பின் தற்காலிக தலைவராக அதன் உறுப்பினரும் நீதிபதியுமான பிரதீப் குமாா் மொஹந்தி இருந்தாா். இந்நிலையில், தேடுதல் குழுவின் அறிக்கையின்படி, லோக்பால் முழு நேரத் தலைவா் மற்றும் உறுப்பினா்களை பிரதமா் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய தோ்வுக்குழு செய்த பரிந்துரை அடிப்படையில் தற்போது குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பிரதமா் நரேந்திர மோடி குற்றமற்றவா் என விடுவித்து தீா்ப்பு அளித்தவா் நீதிபதி ஏ.எம். கன்வீல்கா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.