நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புதுக்கோட்டை: முதல் கட்டத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் 4.79 லட்சம் பேர்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 4,79,791 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:41 pm

சா. ஜெயப்பிரகாஷ்

புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 4,79,791 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 2,40,795 பேர் ஆண்கள், 2,38,977 பேர் பெண்கள், 19 பேர் திருநங்கைகள்.

முதல் கட்டத் தேர்தலில் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களில் அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோயில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை ஆகிய 6 ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இவற்றில் மொத்தமுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களான 22இல், 10 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தப் பத்து இடங்களுக்கு 54 பேர் போட்டியிடுகின்றனர்.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 20, விராலிமலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 21, குன்றாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 14, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 14, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 16, புதுக்கோட்டை  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 15 என மொத்தம் 100 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இவை தவிர, ஏறத்தாழ 1,700 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 219 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக 1,056 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 9 ஆயிரம் வாக்குச்சாவடிப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.