எங்க வீட்ல எங்க அப்பா M.A, B.L ஆனா எங்கம்மாவும் வீட்ல இருக்கற மத்த பெண்களும் 4 வது 5 வதைத் தாண்டலை. இந்த வழக்கத்தை நான் உடைக்கனும்னு நினைச்சேன். ஆனாலும், எங்க குடும்பத்துல கட்டுப்பாடு அதிகம்கறதால எனக்கு ஸ்கூல் முடிச்சதுமே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. ஆனாலும், நான் விடல, என் கணவர் கிட்ட, நான் மேல படிக்கனும், என்னை ஒரு டிகிரி ஹோல்டர் ஆக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவரும் அதை ஏத்துக்கிட்டு என்னைப் படிக்க வச்சாரு. முதல் குழந்தை பிறந்தப்போ BA படிச்சேன். அடுத்தடுத்து MA, B.Ed, M,Phil படிச்சேன். ஆனா, அதையெல்லாம் முடிக்க முடியாம போயிடுச்சு. இப்போ வேல் யூனிவர்சிட்டில P.hd பண்ணிட்டு இருக்கேன். என்னைப் பொருத்தவரைக்கும் கடமையைச் செய், அப்புறமா உரிமையை கேள், கிடைக்கலன்ன அடிச்சுக் கூட கேள்! அவ்ளோ தான்.