இந்தப் புகைப்படத்தைப் பார்த்தீர்களா? கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படம் தான் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராபர் விருதினை சீனாவைச் சேர்ந்த புகைப்படக்காரர் யோங்க்யூங் பவோவிற்கு பெற்றுத்தந்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகெங்கும் இருந்து பாராட்டுகளும், மெச்சுதல்களும் குவிந்து வருகின்றன இந்தப் புகைப்படத்திற்கு.
திபெத்திய நரியும், அணிலும் இருக்கும் இந்தப் புகைப்படம் எந்த வகையில் சிறந்ததாகக் கருதப்படுகிறது என்றால், புகைப்படத்தை நன்கு உற்றுப் பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கே மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். தனது இரையைக் கண்டதும் நரி பதுங்கியவாறு அதைப் பிடித்துண்ண ஆயத்தமாகிக் கொண்டிருப்பதும், தன்னைக் கொல்லவிருக்கும் எதிரியைக் கண்டதும் அந்த குட்டி அணிலின் கண்களில் தெரியும் அதிர்ச்சியும் மிகது துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது இந்தப் புகைப்படத்தில். இதை ஆக்ஷன் ஃபோட்டோகிராபி என்பார்கள். விலங்குகளின் வாழ்வைப் படம் பிடிக்கும் போது அவற்றின் வாழ்க்கை முறையை அணு அணுவாகப் பதிவு செய்வதென்பது மிகக்கடினமான காரியம். ஏனெனில், விலங்குகள் மனிதர்களைப் போல புகைப்படங்கள் என்றதும் உடனே... தலைமுடியை ஒதுக்கிக் கொண்டோ, அல்லது தோகை முடியை சரி செய்து கொண்டோ புகைப்படம் எடுப்பவர்களுக்கு போஸ் தந்து கொண்டிருப்பவை அல்ல. அவற்றின் வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி பதிவு செய்ய வேண்டுமென்றால் நாள்கணக்காக, மாதக் கணக்காக காடுகளில் காத்திருக்க வேண்டும். அப்படித் தவம் கிடந்தால் மட்டுமே இத்தகைய அரிய பதிவுகள் சிக்கக் கூடும்.
அதிலொன்று தான் இந்தப் புகைப்படம். ‘தி மொமெண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் நரியைக் கண்டு பீதியில் அதிர்ந்து நிற்கும் அணிலின் உணர்வுகள் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. இப்படியான மிக அரிய தருணங்களைப் பதிவு செய்வது தான் கானுயிர் புகைப்படக் கலையின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. இந்தப் புகைப்படத்தை விருதுக்குரியதாகத் தேர்வு செய்த லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆய்வுக் குழுத் தலைவர் ராஸ் கிட்மான், ‘மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று இது, இதைத் தக்க தருணத்தில் பதிவு செய்த செயல் பாராட்டுக்குரியது. அதற்குத் தான் விருதளிக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
விருது வென்றுள்ள இந்த புகைப்படமானது லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொண்ட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 48,000 பேரைக் கடந்து இந்த விருதை வென்றுள்ளார் யோங்க்யூங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


