திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபடுவது என்பது இன்றைக்கு சர்வ சாதாரணமாகி விட்டது. லிவிங் டுகெதர் என்று அதற்குப் பெயரிட்டு அதையும் சற்றேறக்குறைய இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாழ்க்கைமுறைகளில் ஒன்றாக்கி விடத் துடிக்கிறார்கள் இன்றைய இளைஞர்களும், இளம்பெண்களும். நிலைமை அப்படி இருக்கையில், ஜோடிகள் மாறும் நிலை ஏற்படலாம். அப்போது இரு தரப்பினரும் பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவ்வகை நோய்களில் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொனோரியா, ஹெர்பெஸ், சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் சி போன்றவை அடங்கும். இந்த நோய்களில் சில உயிருக்கு ஆபத்தானவையாகவும், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தன்மை கொண்டவையாகவும் இருப்பதால், எஸ்.டி.டி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமெனக் கருதப்படுகிறது.