சரி... ஆனால் அதிகக் காரம், அதீத மணமும் உண்மையில் சூடு, சுரணையைத் தூண்டக்கூடியது தானா? அப்படியே தூண்டினாலும் அது நமது உடல்நலனுக்கு உகந்தது தானா? என்று மருத்துவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒரே வரியில்; எதுவானாலும் ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று பழைய பல்லவியைத்தான் பாடி அனுப்புவார்கள். ஆனாலும் வடிவேலு பாணியில் சொல்வதென்றால், உப்பும், உரைப்புமாகச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டு நாக்கை வளர்த்து வைத்திருப்பவர்கள் எல்லோரும் அவரவர் சுட்டு விரலை தன்னைத்தானே சுட்டிக் கொண்டு ‘உனக்குத் தேவையா? இந்த அவஸ்தை உனக்குத் தேவையா? அதான் பெரியவங்க முன்னமே சொல்லி இருக்காங்களே, அளவாச் சாப்பிடனும்னு, அதையெல்லாம் மறந்து விட்டு கார, சாரமாக வாரி, வழித்துக் கொட்டிக் கொண்டு நெட்டை விட்டதன் பலன் தான் இன்றைக்கு ‘அல்சர், டயோரியா, கொலஸ்ட்ரால், பிளட் பிரஸ்ஸர், இதய வால்வுகளில் கொழுப்பு அடைப்பு முதல் கடைசியாக உணவுக்குழாய் கேன்சர் வரை பல பிரச்னைகளில் சிக்கி அவஸ்தைப்படும் நிலை வரை கொண்டு விட்டிருக்கிறது’ என்று நொந்து கொள்ள வேண்டியது தான்!