நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்தியாவின் மிகப் பெரிய மதுபானக் கடை எங்கு இருக்கிறது தெரியுமா?

இந்தியாவிலேயே மிகப் பெரிய பார் இருக்கும் இடம் ஹைதராபாத்திலுள்ள ஜுபிளி ஹில்ஸில்தான்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:14 pm

ராக்கி

இந்தியாவிலேயே மிகப் பெரிய பார் இருக்கும் இடம் ஹைதராபாத்திலுள்ள ஜுபிளி ஹில்ஸில்தான். அந்த மதுக்கடையில் பெயர் டானிக் (Tonique).

Story image

பொதுவாக மதுக் கடைகளின் சுற்றுப்புறம் சொல்லிக் கொள்ளும்படியாக சுத்தமாக இருக்காது. ஆனால் இந்த டானிக் கடையின் பரப்பளவு 15,000 சதுர அடி. இதுதான் நமது நாட்டின் மிகப் பெரிய பார்.

Story image

இங்கு 500-க்கும் மேற்பட்ட விதவிதமான மதுபானங்கள் விற்கப்படுகிறது. பியர், விஸ்கி, வைன் என மதுவகையறா பாட்டில்களை அடுக்கி வைத்திருப்பதையே அழகியலுடன் செய்துள்ளார்கள் இந்த மதுக்கடை நிபுணர்கள்.

Story image

இங்கு வரும் மக்கள் துயரை மறக்க அல்லது சந்தோஷத்தை கொண்டாடத்தான் குடிக்க வருகிறார்கள். மது அருந்துவதை ஒரு சடங்காக இல்லாமல் ரிலாக்ஸ்டாக ஒரு அனுபவமாக மாற்ற விரும்பியே இந்தக் கடையை கவனமாகவும், ரசனையுடனும் உருவாக்கினோம் என்றார் இக்கடையின் நிறுவனர் அனித் ரெட்டி.

Story image

மேலும் அவர் கூறுகையில், தற்போது கிட்டத்தட்ட 1100 ஆல்கஹால் பிராண்டுகள் எங்கள் கடையில் கிடைக்கிறது. விரைவில் டாப் 50 பிராண்டுகளின் வெரைட்டி ட்ரிங்க்ஸ் கிடைக்கும்படி செய்வோம்’ என்று கூறினார் ரெட்டி.

Story image

உலகம் முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கும் ப்ராண்டுகள் வெவ்வேறு நிறத்துடன் வண்ணமயமாக இரண்டு மாடிக் கட்டிட டானிக் பாரில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

Story image

கிங் ஜார்ஜ் V என்ற பாட்டில் தன் விலை 86,000 என்கிறது விலை சற்று அதிகமாக இருந்தாலும் கிடைப்பதற்கரிய ப்ராண்டுகள் எளிதாக அங்கு கிடைப்பதால் விலையைப் பற்றி அங்கு குடிக்க வருபவர்கள் கண்டு கொள்வதில்லையாம்.

Story image

ஜாகர்மிஸ்டர் எனும் தென் அமெரிக்க வைன் போத்தல் ஒன்றை அங்கு வருகை தந்த வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி ஆற அமர ருசிக்கத் தொடங்கினார்.

Story image

உலகை மறக்க தங்கள் கவலையை மறக்க ஹைதராபாத் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் டானிக்கிற்கு வந்து தாக சாந்தி அடைகிறார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.