அதையடுத்து இரண்டாண்டுகளுக்குப் பின் ‘அழகாக இருங்கள், நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ எனும் தலைப்பின் கீழ் இரு புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அந்த இரு புத்தங்கள் வாயிலாக லிஸ்ஸி தனது கதையையே உலகறியச் செய்தார் என்பதோடு, தன்னைப் போல ஒதுக்கப்பட்டவர்களாக உணரக்கூடியவர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனைகளையும் அப்புத்தங்கள் வாயிலாக லிஸ்ஸி வழங்கினார். அந்தப் புத்தகங்கள் லிஸ்ஸியின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதோடு, எது நிஜமாகவே நம்மை அழகானவர்களாக உணரச் செய்யும், கடவுள் நமக்களித்த பிரத்யேக அன்பளிப்புகளை நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொண்டு அவற்றின் மூலமாக நமது வாழ்வின் உன்னதங்களை அடையாளம் காணக்கூடும் என்பதற்கான விடைகளையும் சொல்லக்கூடியதாகவும் அவை அமைந்தன.