இவ்விருது, உலகம் முழுவதுமாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, ஆதரவற்ற சிறுவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கித் தருதல், எய்ட்ஸ் மற்றும் எச் ஐ வி பாதிப்புக்கு உள்ளான சிறுவர், சிறுமிகளைத் தனிமைப்படுத்தாமல் அவர்களையும் சமுதாயத்தின் ஒரு அங்கத்தினராகப் பாவிப்பது, அவர்களுக்கான நிம்மதியான வாழும் சூழலை உருவாக்கித் தருதல், சட்ட ரீதியாக குழந்தைகள் நலனுக்கான உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தல், குழந்தைத் திருமணம், கொத்தடிமைகளாக ஆக்கப்படும் குழந்தைகள் மீட்பு, உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி உழலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மீட்சிக்காக துணிந்து களத்தில் இறங்கிப் போராடும் சிறுவர்களின் வீர, தீரச் செயல்களுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக என பெயரும் பரிந்துரைக்கப்பட்டது எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது எனினும் இத்துறையில் மேலும் போராடுவதற்கான வலுவையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் இவ்விருது இருப்பதால் சந்தோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.