இப்படி ஒரு வினோதமான அழைப்பைக் கண்டு அதிர்ந்து போன ஜெய்தீப் அழைப்பை உடனடியாக நிராகரிக்க, அப்போதும் மறுமுனையில் பேசிய நபர் கிடைத்த வாய்ப்பை விடாது, இன்றைக்குத் தேவையில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் என்ன செய்வீர்கள், ஆகவே இந்த மின்னஞ்சல் முகவரியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேவை ஏற்படும் போது dnanetwork123@gmail என்ற முகவரியில் சப்ஜெக்ட் லைனில் I want to sell my kidny' என்ற குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். என்று கூறி விட்டு அலைபேசி தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை அப்போதைக்கு ஜெய்தீப் மறந்து விட்டாலும். எதற்கும் இருக்கட்டும் என்று பாதுகாப்பு உணர்வுடன் சேமித்து வைத்தார் அந்தத் தொலைபேசி எண்ணை. ஆனால், தொடர்ந்து வந்த நாட்கள் அவரை அந்த சம்பவத்தை அத்தனை எளிதாக மறக்க விடுவதாக இல்லை. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் தனது நண்பர்களில் சிலருக்கும் இதே விதமான தொலைபேசி அழைப்பு விண்ணப்பங்கள் வந்திருப்பதை அறிந்து கொண்ட ஜெய்தீப். இதை அப்படியே விட்டால் இதனால் அப்பாவிகள் எவரேனும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படலாம் எனவே இந்த விஷயத்தை சும்மா விடக்கூடாது. இதைக் கண்டித்து ஏதேனும் எதிர்நடவடிக்கையில் இறங்கியே ஆகவேண்டும் என நான் தீர்மானித்த அந்த நொடியில் என் வீட்டு வரவேற்பறை தொலைக்காட்சிப் பெட்டியில் நியூஸ் 24 சேனல் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான், நான் உடனடியாகத் தீர்மானித்தேன். இந்த விஷயத்தை அவர்களிடம் எடுத்துச் செல்லலாம் என. அந்த நொடியிலிருந்து இந்தப் போராட்டத்தை எடுத்து நடத்தி முடிவு வரை வெற்றிகர்மாகக் கொண்டு வந்தவர்கள் அவர்கள் தான்.