செம்பினாலான ஆபரணங்களை அணிவது உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை. ஆனால் பலரும் செம்பு உடலுக்கு ஆரோக்யமானது என்று சொல்லிக் கொள்வார்களே தவிர, அவர்களிடம் செம்பு எந்த விதத்தில் உடலுக்கு ஆரோக்யமானது என்று கேட்டால் சொல்வதற்கு பதில் இருக்காது. நம்மில் பலர் இப்படித்தான். மொண்ணையாக ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருப்போமே தவிர; அதைப்பற்றி யாரேனும் விளக்கமாகக் கேள்விகள் கேட்கும் பட்சத்தில் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்போம்.
அந்த வகையில் செம்பைப் பயன்படுத்தி எப்படி எல்லாம் நமது உடலில் உள்ள ஆரோக்யக் குறைபாடுகளை களையலாம் என இப்போது பார்க்கலாம்.

செம்பைப் பொறுத்தவரை நமது உடலிலுள்ள பல நோய் காரணிகளைத் தீர்க்கக் கூடிய சக்தி அதற்கு உண்டு. வெகு எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்;
- காய்ச்சலைக் குணப்படுத்தும், தீராத வலிகளைத் தீர்க்கும்,
- செம்பு மிக வலிமையான ஆன்ட்டி பாக்டீரியல் சக்தி கொண்ட உலோகம்.
- ரத்தக்கசிவை உடனடியாக நிறுத்தும் ஆற்றல் செம்புக்கு உண்டு.
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் கொண்டது.
- நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தக் கூடிய ஆற்றலும் கொண்டது
- நமது உடலின் இன்சுலின் விளைவைக் கட்டுப்படுத்தி உடலில் தோன்றும் வீக்கங்களைக் கட்டுப்படுத்தும் சக்தியும் செம்புக்கு உண்டு.
செம்பு சிகிச்சை முறைகள்...
அன்றாட வாழ்வில் செம்பினால் செய்யக் கூடிய சிகிச்சை முறைகளை ‘மெட்டலோதெரபி’ என்கிறார்கள். இந்த சிகிச்சை முறையின் அடிப்படை, செம்பு நாணயங்கள் மற்றும் தகடுகளைப் பயன்படுத்தி நமது உடலில் உள்ள நோய்க்காரணிகளை குணப்படுவதுவதே! சிகிச்சைக்காக நாம் பயன்படுத்தப் போகும் செம்பு நாணயங்கள் மற்றும் தகடுகளைப் பட்டை தீட்டியோ அல்லது துவாரங்கள் இட்டோ பயன்படுத்தும் போது அவற்றினால் கிடைக்கக் கூடிய பலம் மிக அதிகமாகக் கூடிய வாய்ப்பு உண்டாம். செம்பு நாணயங்களை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் முன் 10 முதல் 20 நிமிடங்கள் ஒரு வாணலியில் இட்டு அவற்றைச் சூடாக்கி கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விடு சூடான உலோகத் தகடுகளை ஆற விட்டு, அவை ஆறிய பின் உப்புத்தாள் கொண்டு தேய்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நாணயம் அல்லது தகடில் இருந்து செம்பு விடுபட்டுக் கசியும். இப்போது நன்றாகத் தேய்த்து பாலிஷ் செய்த இந்த செம்பு நாணயங்களை அல்லது தகடுகளை ஒரு கிளாஸில் நிறப்பப் பட்ட 1 டேபிள் ஸ்பூன் சோடியம் குளோரைடு கலந்த கரைசலில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறிய செம்பு நாணயங்களை எடுத்து நமது உடலில் நோய் பாதிப்பு இருக்கக் கூடிய இடங்களில் எல்லாம் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது வைத்து எடுக்க வேண்டும். இந்த முறையைத் தினமும் ஒரு முறையென 15 நாட்களுக்கு செய்து வந்தால். செம்பினால் தீர்க்கக் கூடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

இம்மாதிரியாக உலோகங்களைப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்தும் முறைகளில் இவற்றோடு கூடுதலாக மூலிகைச் சாறுகளையும் சேர்த்துக் கொண்டால் நோய்க்கான தீர்வு விரைவாகக் கிடைக்கவும் வழியுண்டு.
செம்பு சிகிச்சை செய்து கொள்வது எப்படி? இதோ சில டிப்ஸ்...
- தீராத தலைவலி இருப்பவர்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்கு செம்பு நாணயங்களை முன்நெற்றியில் வைத்துக் கொண்டால், உடனடியாக தலைவலி தீருமாம்.
- செரிமானப் பிரச்னை இருப்பவர்கள் 3 அல்லது 4 செம்பு நாணயங்களை உடலில் உணவுக் குழாய் செல்லும் பகுதியில் வைத்து 1 முதல் 20 நிமிடங்களுக்கு வைத்து எடுத்தால் போதும். உடனடியாக செரிமானப் பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள்.
- தினமும் தொடர்ந்து, செம்பு விளிம்பு கொண்ட தலைக் கவசமோ, அல்லது குழந்தைகள் அணியும் ஹேர் போ மாதிரியான வட்ட வடிவக் காப்பையோ தலையில் அணியும் வழக்கத்தைக் கடைபிடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து நார்மலாகும் என்கிறார்கள்.
- காயமான இடங்களில் செம்பு நாணயங்களை வைத்து எடுத்தால் வலி குறைந்து காயம் சீக்கிரம் குணமாகும் என்கிறார்கள்.
- அதுமட்டுமல்ல, செம்பு வளையங்களையோ, வளையல்களையோ அணியும் பழக்கம் இருப்பதும் கூட நல்லது தானாம். இன்சோம்னியா, நியூரோசிஸ், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள், தசைப் பிடிப்புப் பிரச்னைகள் உள்ளிட்டவை எல்லாம் அதன் மூலமாகத் தீருமென்கிறது மெட்டலோதெரபி.
- அது மட்டுமல்ல திருமணத்திற்குப் பின் நீண்ட காலமாக குழந்தைப் பேறில்லாத தம்பதிகள், தண்ணீர் ஊற்றிப் பரிமாற நீண்ட செம்பு ஜக்குகளைப் பயன்படுத்தி வரலாம். சமையலுக்கு செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் அவர்களிடையே எவரொருவருக்கு மலட்டுத்தன்மை இருந்தாலும் கூட அது நீங்க வாய்ப்பிருக்கிறது என்கிறது உலோக சிகிச்சை சாஸ்திரம்.

மேலே சொன்ன சிகிச்சை முறைகள் எல்லாம் மிக, மிக எளிமையான முறைகளே! எல்லோரும் அவரவர் வாழ்வில் முயற்சித்துப் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு!

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் காவலா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


