மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 108 வீணை இசை வழிபாடு நடத்தப் பட்டது. வீணை காயத்ரி உள்ளிட்ட இசைப்பேராசிரியர்கள் மற்றும் இசைஆசிரியைகள் பலர் தங்களது வீணை இசை மாணவிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் வீணையிசையால் அன்னை மீனாட்சியை வழிபட்டனர். விஜயதசமியை ஒட்டிய இந்தப் பெரும் இசை நிகழ்ச்சி கடந்த வருடமும் சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வீணையின் அரசியான கலைவாணிக்கு உகந்த விஜயதசமித் திருநாளில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தாங்கள் அன்னை மீனாட்சி ஆலயத்தில் 108 வீணை இசை வழிபாடு நடத்தியதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இசை ஆசிரியைகள் பலர் தெரிவித்தனர். வீணை இசை அதைக் கேட்டு ரசிப்பவர்களின் மனக்கலக்கத்தைக் கூடப் போக்க வல்லது அதோடு நமது பாரம்பரிய இசைக் கருவியான வீணை கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வரும் இவ்வேளையில் இப்படியான வழிபாடுகள் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் புது நம்பிக்கைகள் முகிழ்க்கவும் உதவுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


