இன்க்லவ், உலகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் செயலி. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், ஸ்க்ரீன் ரீடர், டாக்பேக் வசதிளை உருவாக்கியிருக்கிறோம். இது பாதுகாப்பான செயலி ஆகும். இதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது. கூடிய சீக்கிரம், வீடியோ அழைப்பு வசதியையும் உருவாக்க இருக்கிறோம். இதனால், கேட்கும் சக்தி இல்லாதவர்கள், பேச இயலாதவர்கள் சைகை மூலம் பேசிப் புரிந்து கொள்ள முடியும். இப்போதைய செயலி ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்குகிறது. இந்த ஆன்லைன் வசதிக்கு அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்க்லவ்வை 2016 ஜனவரி மாதம் 21-ம் நாள் தொடங்கினேன். இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து முன்னூறு மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இதுவே ஒரு சாதனைதான்.