

காளியும் கல்மரங்களும் ...
திருவக்கிரை ஊர் எனக்கு முன்பே பரிச்சயமானது தான், பாலகுமாரனின் நாவல் ஒன்றில் இந்த ஸ்தலத்தில் இருக்கும் வக்கிர காளியம்மன் ஆலயத்தை தரிசித்து வந்தால் சேமம் என்றிருந்தது கண்டு என் மகளின் பிறந்த நாளன்று சென்னையில் இருந்து திருவக்கரைக்கு சென்று வந்தோம். காளியைப் பற்றி பேசுவதற்காக இதை எழுதவில்லை, முதலாவதாக இந்த ஊர் காளிக்கும், சந்திர மௌலீஸ்வரருக்கும் அப்பாற்பட்டு மற்றொரு விசயத்திற்கும் கவனிக்கப்பட வேண்டிய ஊர். இந்த ஊரில் ’கல்மரங்கள்’ ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன என்று சென்னை மியூசியத்தில் வாசித்திருந்தேன்.
கல்மரம் :
நிஜமாகவே மரமாக இருந்து கல்லாக மாறிய மரம் கல்மரம். அதாகப் பட்டது 200 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் முறிந்து மழையால் சாய்ந்து ஆற்றோடு இழுத்துச் செல்லப்பட்டு ஆற்றின் ஆழங்களில் பல அடுக்குகளில் பன்னெடுங்காலமாக மூழ்கி பின் வெளிப்படும் போது கல்லாக மாறி விடுகின்றன. இத்தகைய கல் மரங்கள் விழுப்புரத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் அதிகம் இருக்கின்றன. அங்கிருந்து மாதிரிக்கு ஒரு கல் மரத்தை நம் இந்திய புவியியல் துறையினர் சென்னை மியூசியத்திற்கு அன்பளிப்பாக வழங்கி இருந்க்கின்றனர். சென்னை மியூசியம் சென்று வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், சிற்பக்காட்சி சாலையை அடுத்து உட்கார்ந்து சாப்பிட வசதியாக சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் நடுவாந்திரமாக இந்தக் கல் மரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .
மரங்களின் வயதைக் கணக்கிட ரேடியோ கார்பன் முறை பயன்படுத்தி மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வயது கணக்கிடப்படும். அப்படியானால் 200 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மரங்கள் இவை என்பதை எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள்? இந்த கல்மரத்தை பார்த்ததில் இருந்து எப்படி மரங்களின் வயதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டால் என்ன? என்ற ஆசையெல்லாம் வந்து போகிறது,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

