சைவ உணவு சாப்பிடுவோரிடையே கணையம், மார்பகம், சிறுநீரகம் உள்பட 5 புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்யும் 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் கேன்சர்' அமைப்பு சமீபத்தில் சைவ உணவு சாப்பிடுவோர் (வெஜிடேரியன்), அசைவ உணவு சாப்பிடுவோரிடையே(நான்- வெஜிடேரியன்) ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் சில முக்கிய சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன. 'நேச்சர்' இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி சைவ உணவு சாப்பிடுவோர், 5 வகையான புற்றுநோய்க்கு ஆளாவது குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி உண்பவர்களைவிட சைவ உணவு உண்பவர்களுக்கு கணையம், மார்பகம், சிறுநீரகம், புரோஸ்டேட் புற்றுநோய், மல்டிபிள் மைலோமா என 5 வகை புற்றுநோய் தாக்கம் குறைவாக உள்ளது.
அதேநேரத்தில் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ஸ்குவாமஸ் செல் கார்சினோமா எனும் தோல் புற்றுநோய் தாக்கம் அதிகமிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், புற்றுநோய் பாதிப்புகளைத் தவிர்க்க அல்லது குறைக்க முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்க்க வேண்டும், சிவப்பு இறைச்சி உட்கொள்வதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
இந்த ஆய்வுக்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சைவ உணவு உண்பவர்களின் கூட்டமைப்பு மூலம் இந்தியா, அமெரிக்கா, தைவான், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் ஆய்வு செய்துள்ளனர்.
சிவப்பு இறைச்சி உண்பவர்கள் 16.4 லட்சம் பேர், கோழி உண்பவர்கள் 57,016 பேர், மீன் சாப்பிடுபவர்கள் 42,910 பேர், சைவ உணவு உண்பவர்கள் (பால் மட்டும்/ பாலுடன் முட்டை சாப்பிடுபவர்கள்) 63,147 பேர், பால், முட்டை இன்றி சைவ உணவு மட்டும் உண்பவர்கள் 8,849 பேர் என 5 குழுக்களில் 17 புற்றுநோய்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் இறைச்சி சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கணையப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 21% குறைவாக உள்ளது, அதேபோல, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 9% குறைவு; புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்து 12%; சிறுநீரகப் புற்றுநோய் ஆபத்து 28%; மல்டிபிள் மைலோமா ஆபத்து 31% குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில் பெருங்குடல், வயிறு, கல்லீரல், நுரையீரல், எண்டோமெட்ரியல், கருப்பை, வாய் மற்றும் குரல்வளை, சிறுநீர்ப்பை, லிம்போமா, லுகேமியா போன்ற புற்றுநோய்களில் பெரிதாக எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் மூலமாக உலகளவில் இறப்பு அதிகரித்து வருகிறது. 6 மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது.
மீன் சாப்பிடுபவர்களுக்கு மார்பக, சிறுநீரக, குடல் புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து குறைவாகவும், கோழி இறைச்சி உண்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவாகவும் உள்ளது. மற்ற புற்றுநோய்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
பால், முட்டை இன்றி சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அபாயம் அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ஆய்வாளர் டிம் கீ.
அதனால் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் என சத்தான சைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவது சில புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் டிம் கீ உள்ளிட்ட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
புற்றுநோயுடன் உணவுப்பழக்கவழக்கம் தொடர்புடையது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.
Summary
Are you a vegetarian? You have a lower risk of these 5 types of cancer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாட்டியின் கைமணமே ருசியின் ரகசியம்

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 40% புகை பிடிக்காதோர்: காற்று மாசுபாட்டைக் குறைக்க பாஜக எம்.பி. வலியுறுத்தல்

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



