காதலர் தினம் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள தம்பதிகள் டேட்டிங் இரவுக்கான இரவு உணவு அட்டவணையை முன்பதிவு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
சிலர் கடந்த ஆண்டுகளைப் போலவே கொண்டாட முடிவு செய்திருந்தாலும், சிலர் புதுமையாக கொண்டாடவும் விரும்புகிறார்கள்.
அன்பின் நாள் நெருங்கி வருவதால், காதலர் வசம் சில புதுமையான டேட்டிங் யோசனைகள் உள்ளன, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் பிணைக்கச் சில வேடிக்கையான வழிகளை யோசித்து வருகிறார்கள்.
காதலர் தினத்தில் தம்பதிகளைப் பிணைக்கக் கூடிய பல புதுமையான வழிகளில் இவை சில கீழே தரப்பட்டுள்ளது. அன்பைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட நாள் இல்லை என்றாலும், காதலர் தினம் தம்பதியினருக்கு பிஸியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்குவதற்கும், முக்கியமானவருடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கும் ஒரு காரணத்தை அளிக்கிறது.
1) செல்லப் பிராணிகளுடன்
நாய்கள் அல்லது பூனைகள் அல்லது பிற செல்லப் பிராணிகளை விரும்பும் ஜோடிகளுக்கு, செல்லப் பிராணி பார்லர் போன்ற இடம் சொர்க்கத்தை விட குறைவுதான். செல்லப்பிராணிளுடன் இந்த நாளை செலவழிப்பதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் இணையரிடம் மட்டுமல்ல, நான்கு கால் நண்பர்களிடமிருந்தும் அளவில்லாத அன்பைப் பெறுவீர்கள்.
2) போதைப் பிரியர்களுக்கு
மிகச் சிறந்த உணவகத்தில் உங்களுக்கு பிடித்த மதுபானம் இருப்பது நல்லது, திராட்சைத் தோட்டத்தில் புதிதாக நொதிக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையிலிருக்கும் மதுவை ருசிப்பது எப்படியிருக்கும்? பல்வேறு திராட்சைத் தோட்டங்கள் இந்த மதுவை ருசியான அமர்வுகளை வழங்குகின்றன. இதில் பசுமையான திராட்சைத் தோட்டங்கள் வழியான உலாவுதலும் அடங்கும். இத்தகைய சுற்றுப்பயணங்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பயனுள்ளதாக மற்றும் வேடிக்கையாகவும் இருக்கும்.
3) உணவு ரசிகர்களுக்கு
பிடித்தமான உணவை இணையருடன் உண்ணுதல்தான் உங்கள் டேட்டிங் குறிக்கோள் என்றால், உணவகத்தைத் தள்ளிவிட்டு, உணவு நடைப்பயணத்தை மேற்கொள்வதன் மூலம் வேடிக்கையாக மாற்றலாம். மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான உணவு நடைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, மேலும் அவை காதலர் தினத்தையொட்டிபெரும் தள்ளுபடியை தருகின்றன. இது ஜோடிகளுக்கு வெவ்வேறு உணவு வகைகளை ஆராயவும் அதே நேரத்தில் அவற்றைப் பற்றி அறியவும் உதவுகிறது.
4) பிஸியாக இருப்பவர்களுக்கு
வாழ்க்கையில் அதிவிரைவான வேகத்தைக் கடைப்பிடிப்பது பெரும்பாலும் அச்சுறுத்தலாகிவிடும், அதுவும் காதலர் தினத்தன்றும் எக்ஸ்ப்ரஸ் வேகம் வேண்டாம். நிதானமான ஸ்பாவில் ஒரு நாளைக் கழிப்பது என்பது சிலருக்கு கொண்டாட்டத்தின் சிறந்த வழியாகும். ஜோடிகள் ஸ்பா அமர்வுகளைப் பெற்று, நிதானமாக ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


