இளம்பருவத்தில் உடல் பருமன் சிகிச்சையானது நேர்மறையான உளவியல் விளைவுகளையும், உடல்நலம் குறித்த விழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடை (பிஎம்ஐ) இல்லாமல் இருந்தால் உடல் பருமன் பிரச்னை உள்ளதாகக் கருதப்படுகிறது. ‘பிஎம்ஐ’ கணக்கீட்டின் அடிப்படையில் உடல் பருமன் பிரச்னையின் தீவிரத் தன்மையை மருத்துவா்கள் மதிப்பிடுகின்றனா். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்புச் சத்து சேருவதும் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியமான காரணம்.
சமீபகாலமாக இந்தியாவில்தான் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் அதிகம் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்னைகளும், மன ரீதியான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர், முனைவர்.மேகன் கோவ் மற்றும் அவரது குழு இளம்பருவத்தில் உடல் பருமன் ஏற்படுவது, அவர்களது சிகிச்சை முறைகள், எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
இதில் இளம்பருவத்தில் குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
மேலும், குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னை குறித்த 64 ஆய்வு முடிவுகளையும் கருத்தில் கொண்டு, அதன் முடிவுகள் மேலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பது தொடர்ந்து எதிர்காலத்திலும் அவர்களது உடல் உருவத்தை மேம்படுத்த உதவுகிறது. மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்களாக மாறுகின்றனர். உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


