கடினமான உடற்பயிற்சிகளை விட குறைந்த தீவிரத்தன்மை கொண்ட எளிதான உடற்பயிற்சிகளை செய்யும்போது மூளை சிறப்பாக இயங்குவதாகவும், அறிவாற்றல் பெருகுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி இன்றியமையாததாக மாறிவிட்டது. மாறிவரும் நவீன உலகத்தில், என்னதான் உணவு முறைகளை சரியாக மேற்கொண்டாலும், உடலியக்க செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ள அனைத்து வயதினருமே உடற்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வழக்கமாக உடல் உறுப்புகள் சீராக இயங்கவும், உடலும், மனமும் அமைதியுடன் இருக்கவும் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கவும் குறிப்பாக பல உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
இந்நிலையில், உடற்பயிற்சியினால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், குறைந்த தீவிரம் கொண்ட(எளிதான) உடற்பயிற்சி, அதிக தீவிரம் கொண்ட(கடினமான) உடற்பயிற்சி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மனிதனின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை Rs-fMRI என்ற நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது.
அப்போது, குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சி நல்ல அறிவாற்றலை ஏற்படுத்துகிறது. ஒரு செயலை மிகுந்த ஈடுபாட்டுடன் கவனத்துடன் செய்வதற்கு உதவுகிறது என்றும், அதிக தீவிரம் கொண்ட கடுமையான உடற்பயிற்சிகள் உடல் ரீதியாக அதிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பல்வேறு மனித உணர்ச்சிகளை தூண்டுவதில் வழிவகுக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடினமான பயிற்சிகளை விட எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூளையின் செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முதல்முறையாக உடற்பயிற்சிகளின் தன்மையை பொறுத்து மூளையின் செயல்பாடு மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


