வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்தியாவின் மிக விலையுயர்ந்த குடியிருப்புப் பகுதிகளுக்கான டாப் 10 பட்டியலில் சென்னையின் வலுவான தாக்கம்!

டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகள் தவிர சென்னையின் அனைத்துப் பகுதிகளிலுமே தற்போது சதுர அடி மனையின் விலையில் குறையேதும் இல்லை. பொருளாதாரச் சுணக்கம் நீடிக்கும் இந்த நேரத்தில் கூட மனை விலையில்

News image
Updated On :10 செப்டம்பர் 2019, 9:03 am

சமீபத்திய ஆய்வொன்றில் சென்னையின் மூன்று குடியிருப்புப் பகுதிகள், இந்தியாவின் மிக விலையுயர்ந்த பகுதிகளுக்கான டாப் 10 பட்டியலில் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இதன்மூலமாக இந்தியாவின் ஹைடெக் நகரங்களின் பட்டியலில் சென்னை அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. 

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், எக்மோர், அண்ணாநகர் உள்ளிட்ட மூன்று பிரதான குடியிருப்புப் பகுதிகளுக்கு இந்தியாவின் சொத்துச் சந்தையில் டாப் டென் லிஸ்டில் முறையே 4, 5, 7 ஆம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. டாப் 10 பட்டியலில் இடம்பெறுவதென்பது அப்பகுதியில் உள்ள நிலத்தின் ஒரு சதுர அடிக்கான பண மதிப்பைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.

அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு சதுர அடி மனையின் தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட விலை என்பது 18,000 ரூபாயாக உள்ளது.

எக்மோரில் ஒரு சதுர அடி மனையின் விலை ரூ.15,100, அண்ணாநகரில் 13,000 ரூபாயாகவும், கீழ்பாக்கத்தில் 10,600 ரூபாயாகவும், சென்னை, கோட்டூர்புரத்தில் ஒரு சதுர அடி மனையின் விலையானது 9,600 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் சராசரியாக ஒரு ஆடம்பர அபார்ட்மெண்ட் என்பது 2,190 சதுர அடி முதல் 2,890 சதுர அடிக்குள் அடங்கும்.

டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகள் தவிர சென்னையின் அனைத்துப் பகுதிகளிலுமே தற்போது சதுர அடி மனையின் விலையில் குறையேதும் இல்லை. பொருளாதாரச் சுணக்கம் நீடிக்கும் இந்த நேரத்தில் கூட மனை விலையில் அதிரடி மாற்றங்களேதும் நிகழ்ந்துவிடவில்லை.

சென்னை ஆழ்வார் திருநகரில் ஒரு சதுர அடி மனையின் விலையானது 6,758 முதல் - 7,565 ஆக நீடிக்கிறது.

மாங்காடு - 3,485 முதல் 4,080 ரூபாய் வரை...

சென்னை சொத்துச் சந்தை விலைப்பட்டியல்
குடியிருப்புப் பகுதிகள்சதுர அடி மனையின் விலை
ஆழ்வார் திருநகர்Rs. 6,758 - 7,565/sq. ft.
அயப்பாக்கம்Rs. 3,400 - 3,782/sq. ft.
மதுரவாயல்Rs. 5,142 - 6,035/sq. ft.

வானகரம்

Rs. 4,930 - 5,015/sq. ft.
ஐய்யப்பந்தாங்கல்Rs. 3,910 - 4,250/sq. ft.
மாங்காடு Rs. 3,485 - 4,080/sq. ft.
முகலிவாக்கம்Rs. 5,058 - 5,652/sq. ft
பூந்தமல்லிRs. 3,612 - 4,122/sq. ft
திருவேற்காடுRs. 4,165 - 4,930/sq. ft.
மாங்காடுRs. 3,485 - 4,080/sq. ft.
சூளைமேடு
Rs. 6,460 - 7,820/sq. ft.
Rs. 4,165 - 5,100/sq. ft.

இதே போல சென்னையின் பிற இடங்களிலும் சதுர அடி மனையின் விலையென்பது குறைந்த பட்சம் 3,500 ரூபாயில் இருந்து அதிக பட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 18,000 ரூபாய் வரை நீடிக்கிறது.
 

Related Article

உன்னதக் காதல் இது தானோ! கணவரின் இறந்த உடலைப் பார்த்த கணமே மரித்த மனைவி!

மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பிய வேலூர் தந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

மிக விசித்திரமான சுற்றுவட்டப் பாதையுடன் ஜூபிடருக்கு அருகில் சுழன்று கொண்டிருக்கும் புதிய கோள் கண்டிபிடிப்பு!

ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்...

பள்ளிக்குச் செல்கிறார் இளவரசி... அரண்மனையின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Dinamani
தினமணி இணையதளத்தை பின்தொடர
  • Arattai
செயலிகளை பதிவிறக்க
App StoreGoogle Play
செய்திப் பிரிவுகள்
©2026 தினமணி மற்றும் அதன் அனைத்து உடைமைகளும் பாதுகாப்பில் உள்ளன. தனியுரிமை கொள்கை மற்றும் பயனாளர் விதிமுறைகள்.
The New Indian Express Group