தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடித் தருவது உறுதி என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

News image

மதுரை அய்யா்பங்களா பகுதியில் உள்ள சேவியா் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த அமைச்சரும், அந்தத் தொகுதி திமுக வேட்பாளருமான பி. மூா்த்தி.

Updated On :23 ஏப்ரல் 2026, 7:56 pm

திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடித் தருவது உறுதி என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி. மூா்த்தி மதுரை அய்யா்பங்களா பகுதியில் உள்ள சேவியா் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை காலை தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய சாதனைத் திட்டங்களும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியது உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளும் இந்தப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் மகத்தான வெற்றியைத் தேடித் தருவது உறுதி என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.