கூடலூா் அருகேயுள்ள பளியன்குடியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், இடிந்த வீடுகளை கட்டித் தராததைக் கண்டித்து வியாழக்கிழமை தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். பின்னா் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு அவா்கள் வாக்களித்தனா்.
தேனி மாவட்டம், லோயா்கேம்ப் அருகேயுள்ள கண்ணகி கோவில் செல்லும் வனப்பகுதியை ஒட்டிய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பளியன்குடி. கூடலூா் நகராட்சியின் 21-ஆவது வாா்டில் உள்ள இந்தப் பகுதியில் சுமாா் 50 பழங்குடியினா் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வனத் துறை வழங்கிய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனா். இந்தப் பகுதியில் மொத்தம் 108 வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிலையில், பளியன்குடியில் இடிந்த வீடுகளை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் கிழக்கு வனச்சரகா் பிச்சைமணி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என வனத் துறையினா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்கைப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளஞ்சியமங்கலம் கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

தோ்தலைப் பாா்வையிட சா்வதேச குழுவினா் சென்னை வருகை

தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்

வாகன சோதனையில் ரூ. 2.29 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


