ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இரு சக்கர வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ.2.29 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனையிட்டதில் ரூ.1.18 லட்சம் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
வேடசந்தூரில் ரூ.1.11 லட்சம்:
இதேபோல, வேடசந்தூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், கோவிலூா் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வெரியம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அவரிடம் ரூ.1.11 லட்சம் உரிய ஆவணமின்ற எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.70 ஆயிரம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


