ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

'நீ சாதிக்கப் வேண்டியது நிறைய இருக்கிறது பேபி!’ மகளுக்கு அறிவுரை கூறும் நடிகர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தொடங்கியதிலிருந்து உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் களத்தில்

News image
Updated On :30 மார்ச் 2018, 9:02 am

மக்கள் நீதி மய்யம் தொடங்கியதிலிருந்து உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் களத்தில் படு தீவிரமாக இருந்து வருகிறார். நேரம் இருக்கும் போதெல்லாம் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார் கமல். அரசியல் மற்றும் விஸ்வரூபம் 2 பரபரப்புக்கு இடையே மகள் அக்‌ஷரா ஹாசனுடன் அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார் கமல்.

அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த கமல், ‘மகள் மற்றும் பயிற்சியாளர் சூரியுடன் ஜிம்மிங் செய்கிறேன். நீ சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது பேபி, எனவே உடல் பலத்தை, சக்தியை அதிகரித்துக் கொள். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மனமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உறுதியான உடல் தான் மிக உறுதியான மனத்தை தரும்’ என்று கமல் அக்‌ஷராவுக்கு கூறியிருக்கிறார்.

விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் களமிறங்கவுள்ளார் கமல். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் 2018-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லட்சுமி சரவணகுமார் ஆகியோர் எழுதுகிறார்கள்.

சென்ஸார் வேலைகளும் முடிவடைந்த நிலையில் இந்த சம்மர் ஸ்பெஷலாக விஸ்வரூபம் 2 வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.