- எனும் மிகச் சரியான அணுகுமுறையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேகில் மூத்த நடிகர் ஜிதேந்திராவின் உறவினராக பெண்ணொருவரும் சமூக ஊடகங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது; தனக்குப் 18 வயதிருக்கையில் ஒரு இந்தித் திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக தனது உறவினரான ஜிதேந்திரா(28), தனது தந்தையின் அனுமதியுடன் தன்னை படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றார் எனவும், அங்கே தன்னை அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகவும் அந்தப் பெண் ஜிதேந்திரா மீது குற்றம் சுமத்தியுள்ளார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கான அவசியம் என்ன? என்ற கேள்விக்கு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு விதமான போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தான் பெண்களுக்கு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல்களை சமூகத்தின் முன் அச்சமின்றி முன் வைக்க உகந்த சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. என் விஷயத்தில் குற்றவாளியான ஜிதேந்திரா சமூகத்தில் பெரிய மனிதர் போர்வையில் உலவுபவர். பணபலம், அதிகார பலம், ஊடக பலலும் மிகுந்தவர். அவரைத் தனியொரு ஆளாக என்னால் எதிர்க்க முடியாது. அது மட்டுமல்ல, எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் இருக்கையில் நான் இப்படி ஒரு குற்றச்சாட்டை ஜிதேந்திரா மீது சுமத்தியிருந்தால் அவர்கள் நிச்சயம் உயிரோடு இருந்தவரை தங்கள் வாழ்நாள் மன உளைச்சல் அடைந்திருப்பார்கள். அந்தக் காரணத்திற்காகவும் தான் நான் இதுநாள் வரை பொறுமை காத்தேன் என்கிறார்.