தன்னுடைய உதவும் முயற்சியைப் பற்றிப் பேசும் போது, சுஜாதா கூறுவது, என்னால், மகனை இழந்த அனிகெட் கொதல்லியின் அம்மாவுக்கு ஒரு மகனைத் தேடித்தர முடியாமல் போகலாம், கணவனை இழந்த அந்த அப்பாவி மனைவிக்கு மீண்டும் கணவனைத் தர இயலாமல் போகலாம், ஆனால் தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே அறியாதிருக்கும் அந்த மூன்றுவயதுக் குழந்தைக்கு வெகு நிச்சயமாக ஒரு தாயாக இருக்க முடியும். அவளது எதிர்கால கல்வித்தேவை, வாழ்க்கைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். விரைவில் சட்டரீதியாக தத்தெடுப்புக்கான வேலைகளை முடித்து விட்டால் அவள் எனது நான்காவது குழந்தையாவாள். தத்தெடுத்த பின்பு குழந்தை என்னுடன் வசிப்பதும், அவளது சொந்தத் தாயுடன் வசிப்பதும் அவளது குடும்பத்தாரின் விருப்பத்தைப் பொருத்தது.