அபுதாபி விமானநிலையத்தில் நேற்று நடைபெற்ற பிக் 5, லக்கி டிரா 181 வது தொடர் நிகழ்ச்சியில் டாப் 10 லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து மில்லியனர்களும் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரிலும் வென்றது கிருஷ்ணம் ராஜூ மட்டுமே. அதிலும் இவருடையது எப்படிப்பட்ட வெற்றி என்கிறீர்கள்? கிருஷ்ணம் ராஜூ, பிற போட்டியாளர்களைப் போலத் தன்னுடைய போட்டிக்கான டிக்கெட்டை இம்முறை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால் இப்போது மொத்தப் பரிசுத் தொகையும் இவர் ஒருவருக்கே சொந்தம். அப்படி என்றால் இது சூப்பர் பம்பர் பரிசு தான் இல்லையா?