ரியாலிட்டி ஷோ சமையல் போட்டியில் ரூ.50 லட்சம் பரிசா!
டெல்லியைச் சேர்ந்த ரித்து அரோரா ரூ.50 லட்சம் பரிசு ஜெயித்திருக்கிறார். எதில் தெரியுமா? குவாக்கர் ஓட்ஸ் நடத்திய “பிரிங் யுவர் டேஸ்ட்டியஸ்ட் பவுல்“ சமையல் போட்டியில்.


டெல்லியைச் சேர்ந்த ’ரித்து அரோரா’ ரூ.50 லட்சம் பரிசு ஜெயித்திருக்கிறார். எதில் தெரியுமா? குவாக்கர் ஓட்ஸ் நடத்திய “பிரிங் யுவர் டேஸ்ட்டியஸ்ட் பவுல்“ சமையல் போட்டியில். இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட திறமை வாய்ந்த பிற 14 சமையற்கலை போட்டியாளர்களை வென்று நேற்று ஞாயிறு அன்று ரித்து இந்த பரிசை அடைந்திருக்கிறார். இறுதிப் போட்டிக்கு நடுவராக இருந்து ரித்துவின் ஓட்ஸ் அடிப்படையிலான ரெசிப்பிக்கு பரிசு அறிவித்தது யார் தெரியுமா? இன்றைய தேதிக்கு இந்தியாவின் நம்பர் ஒன் மாஸ்டர் செஃப் என்று கொண்டாடப்படும் ’விகாஷ் கண்ணா’.
இந்த வருடத்தின் மே மாதத்தில் குவாக்கர் இந்தப் சமையல் போட்டியை அறிவித்ததில் இருந்து சுமார் 6000 சமையல் ஆர்வலர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். கடந்த 14 ஆம் தேதி விகாஷ் இறுதிப் போட்டிக்கு தகுதியானதென்று 3 ரெசிப்பிகளை தேர்வு செய்திருந்தார். இறுதிச் சுற்றுக்குத் தேர்வான மூவரும் தங்களது ஒட்டு மொத்த சமையற் திறனையும் வெளிப்படுத்தி அருமையான ஓட்ஸ் ரெசிப்பிகளை வழங்கி இருந்தனர். இந்தச் சுற்றில் நடுவர் விகாஷ் போட்டியாளர்களுக்கு சற்றுக் கடுமையான சமையல் மூலப் பொருட்களைக் கொடுத்து அதிலிருந்து யாராலும் மறுக்க முடியாத சுவையுடன் கூடிய ரெசிப்பிகளை அவர்களால் உண்டாக்க முடிகிறதா என்றெல்லாம் சோதித்தார்.

விகாஷ் கண்ணாவைப் பற்றி தெரியாதவர்கள் கூகுளில் “மாஸ்டர் செஃப் ஆஃப் இந்தியா” என்று டைப் செய்தீர்களானால் அவரைப் பற்றியும் சமையல் போட்டிகளில் அவரது கடுமையான தேர்வு முறைகளைப் பற்றியும் எளிதாக அறிந்து கொள்ளலாம். டி.வி ரியாலிட்டி ஷோ மட்டுமல்ல விகாஷ் பெப்சிகோ நிறுவனத்தின் ’நியூட்ரிசன் பிராண்ட் அம்பாஸிடராகவும்’ பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்க விசயம். ஆகவே இப்படிப் பட்ட ஒரு திறமையான மாஸ்டர் செஃப்பின் கீழ் பல கட்ட பல்சுவைச் சோதனைகளின் பின் ஒரு வழியாக குவாக்கர் ஓட்ஸ் டேஸ்ட்டியஸ்ட் பவுல் இறுதிச் சுற்றில் 30 நிமிடங்களுக்குள் விருந்தினர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையிலான சுவையான ரெசிப்பியை தயாரித்துக் காட்டிய ரித்து அரோரா ரூ.50 லட்சம் பரிசு வென்றது பெருமைக்குரிய விசயம் தானே!
இந்நிகழ்ச்சியில் குறித்துப் பேசிய பெப்சிகோ நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபிகா வாரியர். ”வீட்டில் தமது அன்புக்குரியவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமே விதம் விதமாக சமைத்துக் கொடுத்து தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இல்லத்தரசிகளுக்கு இப்படியான சமையல் போட்டிகள் மிகச் சிறந்த வாய்ய்ப்புகளை வழங்கி வருகின்றன. அதோடு இந்தப் போட்டிகள் மூலம் குவாக்கர் ஓட்ஸ் இல்லத்தரசிகளை மட்டுமல்ல சமூகத்தில் பலதரப்பட்டோரையும் சத்தும், சுவையுமான ஓட்ஸ் ரெசிப்பிகளை எப்படியெல்லாம் உருவாக்கலாம் எனும்படியான தேடலில் இறங்க ஊக்குவிக்கிறது... என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...