இது வரை ஐஸ்வர்யா ராய் மூலமாக பச்சைக் கண் அழகியைத் தான் நாம் கண்டிருக்கிறோம், இதோ ஒரே நாளில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் என உலகம் முழுக்க மல்ட்டி பல்ட்டி ஹிட் அடித்திருக்கிறார் ஒரு பச்சைக் கண் அழகன்! யாரந்தப் பச்சைக் கண் அழகன் என்று தேடினால் அட... கடைசியில் அவர் ஒரு பாகிஸ்தானி டீக்கடை உரிமையாளராம். பெயர் அர்ஷாத் கான், வயது 18. உலகம் முழுக்க சோசியல் மீடியாக்கள் இவரை வலை போட்டு தேடிக் கொண்டிருக்க இந்த 18 வயது பாக் டீக்கடைத் தம்பியோ கர்மமே கண்ணாக இஸ்லாமாபாத் இத்வார் பஜாரில் இருக்கும் தனது டீக்கடையில் சமத்தாக டீ ஆற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். ஊர் முழுக்க தன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாவம் அதுவரை அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.