வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அறிவியல் கண்காட்சியா? மேஜிக் ஷோவா? வேலம்மாள் பள்ளியின் அசத்தல் ’பிக் பேங்’!

மாணவர்களின் ஒருமித்த உற்சாகமும், ஆர்வமும் நடந்து கொண்டிருப்பது ’அறிவியல் கண்காட்சியா’ அல்லது ’மேஜிக் ஷோவா’ எனும் பிரமிப்பூட்டும்படியாக இருந்தது.

News image
Updated On :10 நவம்பர் 2016, 11:29 am

சென்னை முகப்பேரில் இருக்கும் வேலம்மால் முதன்மைப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் இன்று 10.11.16 அன்று ‘பிக் பேங்’ எனும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு நேரடிப் பரிச்சயமில்லாத பல்வேறு அறிவியல் ஆய்வுகள் செய்து காண்பிக்கப்பட்டன. மாணவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும்
பங்கேற்க வைக்காமல் அவர்களையும் அறிவியல் செய்முறைகளில் இணைத்துக் கொண்டு குதூகலத்தோடும், உற்சாகத்தோடும் பங்கேற்க வைத்தமை பாரட்டுதலுக்குரியதாக இருந்தது.

Story image

மாணவர்களும் யானைப்பசை, ஹோமோ போலார் மோட்டார், டிரை ஐஸ், பெர்னாலிக் கோட்பாடு, உராய்வு சோதனை, காற்றழுத்த விதி, ரூபன் குழாய், திரவநிலை நைட்ரஜனை வெடிக்க வைத்தல் உள்ளிட்ட அறிவியல் சோதனைகளில் ஆர்வமுடன் பங்கேற்று கண்டு களித்தனர். மாணவர்களின் ஒருமித்த உற்சாகமும், ஆர்வமும் நடந்து கொண்டிருப்பது ’அறிவியல் கண்காட்சியா’ அல்லது ’மேஜிக் ஷோவா’ எனும் பிரமிப்பூட்டும்படியாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியை எல்.எம்.ஈ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து வேலம்மாள் முதன்மைப் பள்ளி நிர்வாகம் நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.