உலகின் மிக பழமையான நீர் கனடாவில் உள்ள ஒர் சுரங்கத்தில் இருப்பதை கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகள் 2.4 கிலோமீட்டர் ஆழத்திலும், 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், 2 பில்லியன் அதாவது 200 கோடி ஆண்டுகளுக்குமுற்பட்ட இந்த நீர் மாதிரியானது தோராயமாக மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கிறது. இந்த நீர் மாதிரியில் அதிக அளவில் சிறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ரசாயன சுவடுகள் கிடைத்துள்ளன. கடல் நீரை விட இந்த நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருந்தாலும் சோதனையில் அருந்துவதற்குத் தகுந்த நல்ல நீராகவே கண்டறியப் பட்டுள்ளது.
உலகில் இதுவரை கண்டறியப் பட்ட நீர் மாதிரிகளில் இது தான் மிகப் பழமையானதாக கருதப் படுகிறது. கண்டறியப்பட்ட நீரில் கிடைத்த ரசாயனச் சுவடுகளின் அடிப்படையில் டொராண்டோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வு முடிவில் அன்று வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் தகவல்கள் அறியப்படலாம்.
Source: private t.v chanel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை வேட்பாளா்கள் வாக்களிப்பு

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

துத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


