ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வோல்டா ஸாப்: இது பைக்கா இல்ல சைக்கிளா?

சைக்கிளுக்கும் பைக்குக்கும் நடுவிலான இடைவெளியை  நிரப்ப வந்த எலெட்ரிக் பைசைக்கிள்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:10 pm

Karthiga Vasudevan

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வோல்டா நிறுவனம் கிராஸ் ஓவர் எலெட்ரிக் பைசைக்கிள் விற்பனையில் தனது முதல் முயற்சியைத் துவக்கி உள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை ,பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக சைக்கிளை  ஓட்டிப் பார்க்கும் முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வோல்ட்டா மோட்டார்சின் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முன்னோட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

’வோல்டா ஸாப்’ இந்தியாவின்  முதல் க்ராஸ் ஓவர் எலெட்ரிக்கல் சைக்கிள். சைக்கிளுக்கும், மோட்டார் பைக்குக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறது இந்த கிராஸ் ஓவர் பைசைக்கிள். இந்த சைக்கிள் பார்க்க பைக் போயிருந்தாலும் இதற்கு பெட்ரோல் தேவையில்லை, இதை இயக்க நமக்கு லைசன்ஸ் தேவையில்லை, ரெஜிஸ்டரேசனும் தேவையில்லை. மணிக்கு 25 முதல் 32 கிலோ மீட்டர் ஓடும் திறனுடையது. ஒருமுறை பெடல் செய்தால் மூன்று முறை சக்கரம் இயங்கும் முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்போர்ட்டட்  சைக்கிள்கள் வாங்குவதை விடவும் அல்லது ஆடம்பரமான பைக் வாங்குவதை விடவும் இந்த கிராஸ் ஓவர் சைக்கிள் விலை குறைவு தான். 

இதன் வடிவமைப்பாளர்கள் கிலோமீட்டருக்கு பத்து பைசா வீதம் தான் இதற்கான செலவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் பிற பிராண்டட் மோட்டார் பைக்குகளுடன் இதற்கான போட்டி மிகக் கடுமையானது என்பதால் இதற்கான விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த கிராஸ் ஓவர் பைசைக்கிள்கள் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் போன்றவை எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் சைக்கிள்கள் நீண்ட தூர பயணங்களுக்கு லாயக்கற்றவை எனும் நம்பிக்கையை உடைப்பதே இந்த வகை கிராஸ் ஓவர் பைசைக்கிள்களின் முதல்  நோக்கம் எனவே முற்றிலும் செலவைக் குறைப்பதோடு சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத தன்மையில் இயங்க வைத்திருப்பதும் இந்த சைக்கிள்களில் விரும்பத்தக்க அம்சம் எனலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.