இத்தகைய சூழலை தனது வெளிநாட்டு அலுவல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் எதிர் கொண்ட திரு. பார்த்திபன் அவர்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக உதயமானது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணைய தளம். தமிழர் பாரம்பரிய தின்பண்டங்கள்அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அதனை மக்களிடம் சேர்க்கும் இமாலய முயற்சியின் துவக்கப் புள்ளிதான் அது. அதன் பின் இவரது தம்பி மற்றும் நண்பரின் கூட்டு முயற்சியால் இன்று வெள்ளியணை அதிரசம், பள்ளபட்டி பூந்தி, முதலூர் மஸ்கோத் அல்வா, ஊத்துக்குளி நெய் பிஸ்கட் முதல் தூத்துக்குடி குச்சிமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு தாண்டி இன்னும் பல ருசிகரமான தின்பண்டங்கள் வரை, தங்களின் இணையத்தில் சேர்த்துள்ளனர்.