என் வாழ்க்கையின் விசித்திரம் இது தான். ஃபிட்னஸுக்கு என்று தனியாக நான் எதையும் திட்டமிடுவதில்லை. என் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும், திரையில் என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் நன்றாகத் தெரியவேண்டும் என்பதற்காக, சுருக்கமாகச் சொல்வதென்றால் என் திறமைகளை நான் விற்பனை செய்வதற்கு இது அவசியம் என்பதால் இதை நான் அனிச்சையாகத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆரம்பத்தில் என்னை யாராவது புகைப்படம் எடுத்தால் எனக்கு அது பிடிக்காது. ஆனால், அதுவே தொழில் என்று வரும்போது எப்படி புகைப்படம் எடுத்தால் நான் அழகாகத் தெரிவேன், ஃபிட்டாக இருப்பேன் என்பதைக் கற்றுக் கொண்டேன். இப்போது எனக்கது அத்துப்படி. என் திறமையும், உழைப்பும் சிறந்த முறையில் வெளிவர வேண்டுமென்றால் நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறேன். இது முற்றிலுமாக டேலண்ட் பிஸினஸ் என்பதை நான் புரிந்து கொண்டேன். இதை எல்லோருமே புரிந்து கொண்டால் ஃபிட்னஸுக்காக எதையும் வலிந்து செய்ய வேண்டியதில்லை. அது தானாக நமது வாழ்க்கைமுறைகளில் வாட் ஐ மீன் லைஃப்ஸ்டைல்களில் ஒன்றாகி விடும். பிறகது எப்போதும் சுமையாகவோ, குற்ற உணர்வாகவோ இருக்காது.