தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கண்ணாடி போல உங்கள் பாதம் பளபளக்க இதைப் படித்துப் பயன் பெறுங்கள்

முகத்தை கவனிக்கும் அளவுக்கு கை கால்களை யாரும் கவனிப்பது இல்லை. அதுவும் குறிப்பாக பாதங்க

News image
Updated On :5 மே 2018, 6:30 am

முகத்தை கவனிக்கும் அளவுக்கு கை கால்களை யாரும் கவனிப்பது இல்லை. அதுவும் குறிப்பாக பாதங்கள். அழகான  மென்மையான பாதங்கள் பெற என்ன செய்யலாம். இதோ குறிப்புக்கள்:

பாதங்களை நன்றாக கழுவவும். ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும்.

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு ஆகியவற்றைப் போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.  

அதன் பிறகு மெல்லிய பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பளிச் பாதங்களை நீங்களே காண்பீர்கள்.

இதன் அடுத்த கட்டம், பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய காட்டன் துணியால் துடைத்துவிட்டு, நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவுங்கள்.

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்புள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.  

காலில் காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக அத்தழும்பு மறைந்து விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.