17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டில் மீதமாகும் பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்கும் வழிகள்!

வீட்டில் மீதமாகும் பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்கப்பதற்கான டிப்ஸ்..

News image

Ginger - IANS

Updated On :12 மே 2026, 11:00 am IST

வீட்டில் சில வேளைகளில் ஒரு பொருள் அளவுக்கு அதிகமாக வந்துவிடும். கறிவேப்பிலை, தேங்காய், புதினா, இஞ்சி, பூக்கள் போன்றவை

ஒன்று அதனை பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் தூக்கித்தான் எறிய வேண்டும் என்று அவசியமில்லை.

அதிகமாக இஞ்சி இருந்தால், அதை மண்ணில் அல்லது சிறிய தொட்டியில் மண்ணை நிரப்பில் அதில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

பூவை ஈரத் துணியில் சாற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்கு கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்துக்குள் பூவை வைத்து மூடுங்கள். பூ வாடாமல் வைத்தபடியே இருக்கும்.

ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்துவிட்டால், அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம், பாலுடன் கலந்து கரைந்துவிடும். பின்னர், அந்தப் பாலை பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். சுவையாக இருக்கும்.

கொத்தமல்லி, புதினா போன்றவை அதிகமாக இருந்தால் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதன் வேர் மூழ்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். சில நாள்கள் வாடாமல் புதிதுபோல் இருக்கும்.

கறிவேப்பிலை இருந்தால் கறிவேப்பிலை பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். சாப்பாடுக்கும், இட்லி தோசைக்கும் சைட் டிஷ்ஷாக இருக்கும்.

மீதாகும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தமான துணியால் துடைத்து வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். அதனை இட்லி பொடி, மிளகாய் தூள் அரைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Summary

Ways to save leftovers at home without wasting them

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.