சிலந்திகள் கூடு கட்டி அதனால் ஏற்படும் ஒட்டடை மற்றும் காற்றில் வரும் தூசுகள் சேர்ந்து உருவாகும் நூலாம்படை போன்றவை வீட்டின் அழகைக் கெடுக்கும் முக்கிய காரணிகள்.
பொதுவாக சில குறிப்பிட்ட இடங்களில்தான் இந்த ஒட்டடை சேரும். அந்த இடங்களை முற்றிலும் மாற்றிவிட முடியும்.
வீட்டில் நூலாம்படை சேரும் இடங்களில் வினிகருடன் சம அளவு தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே செய்தால், நூலாம்படை சேராது. சிலந்திகளுக்கும் இது அலர்ஜி.
மற்றொரு யோசனை என்னவென்றால், வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து, ஒட்டடை சேரும் இடங்களில் துடைத்துவிடுங்கள்.
சிலந்திகள் இந்த வாசனைக்கு வரவே வராது.
புதினா எண்ணெய் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி ஜன்னல் ஓரங்கள், ஒட்டடை சேரும் இடங்களில் ஸ்பிரே செய்து விடலாம்.
வீட்டை பெறுக்கும்போதே கதவின் இடுக்குகளையும் ஒரு முறை துடைப்பத்தால் துடைத்துவிட்டால் அங்கு ஒட்டடை சேருவதைத் தடுக்கலாம்.
கூடுதலாக ஒரு தகவல் என்னவென்றால், சிலந்திகள் வலைப் பின்னி அதன் மூலம் சிறு உயிரினங்களைப் பிடித்து சாப்பிட்டு நம் வீட்டை பாதுகாக்கிறது. எனவே, வீட்டுக்கு வெளியே இருக்கும் சிலந்தி வலைகளை அவசரப்பட்டு அப்புறப்படுத்திவிட வேண்டாம்.
வீட்டுக்குள் வேண்டுமானால் ஒட்டை சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.
Summary
Here are some simple ways to avoid getting mold in your home.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (21.06.2026) - துலாம்

சைனஸுக்கு இதுதான் தீர்வு!

வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆட வேண்டுமா?

வீட்டில் மீதமாகும் பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்கும் வழிகள்!
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly





