ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்சார் வசதிகளுடன் வந்துவிட்டன டிஷ்வாஷர்கள்!

பாத்திரங்களைத் தேய்க்க சென்சார் வசதிகளுடன் டிஷ்வாஷர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

FDA suspends 6 eateries for unhygienic kitchens, expired food

சமையலறை - file photo

Published On :2 ஜூலை 2026, 11:00 am IST

சமையல் செய்வதைக் காட்டிலும், சமைத்த பாத்திரங்களைத் தேய்ப்பதற்குத்தான் அதிக நேரம் செலவாகும். சாப்பிட்ட தட்டுகள், சமைத்த பாத்திரங்கள் என எல்லாவற்றையும் அதற்கென தனித்தனி கவனம் செலுத்தி தேய்த்து எடுக்க வேண்டும்.

வீடுகளில் பெண்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை வீட்டில் பாத்திரங்கள் தேய்க்கவே செலவிடுகிறார்கள்.

அதிக பாத்திரம் இருந்து வீட்டில் டிஷ்வாஷர் வைக்க இடமிருந்து பொருள் வசதியும் இருந்தால் டிஷ்வாஷர் வாங்கிவிடலாம்.

சிங்க் முன்பு நின்று கொண்டு பல மணி நேரம் பாத்திரங்கள் தேய்க்க வேண்டாம். டிஷ்வாஷரில் பாத்திரங்களை அடுக்கினோமா, சோப்புத் தூள் சேர்த்தோமா, மெஷினை இயக்கினோமா என வேலை முடிந்துவிடும்.

தற்போது, பல டிஷ்வாஷர்கள் சென்சார் வசதியுடன் வந்திருப்பதால், பாத்திரங்களுக்கு ஏற்ப சுத்தப்படுத்தும் திறனையும் மாற்றியமைத்துக் கொள்கிறது.

குறைந்த தண்ணீரில் டிஷ்வாஷர்கள் பாத்திரங்களை தேய்த்து அலசிக் கொடுத்து விடுகிறது. சில அடிபிடித்த பாத்திரங்களை வேண்டுமானால் கையில் தேய்க்கும் நிலை ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான பாத்திரங்கள் சுத்தமாகிவிடுகின்றன.

ஒவ்வொரு டிஷ்வாஷரும் நாம் தேர்வு செய்யும் வசதிக்கு ஏற்ப 9 முதல் 15 லிட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்தும். பெரிய பெரிய குடும்ங்களில் அதிக தண்ணீர் செலவாகும். சாமான் கழுவும்போது தொடர்ந்து குழாய் திறந்த நிலையிலேயே இருக்கும்.

ஒன்று முதல் மூன்று மணிநேரங்கள் எடுத்துக் கொள்ளும். பொதுவாக அதற்காக நாம் செலவிடும் நேரம் குறைவுதான். பாத்திரங்களை அடுக்கவும், எடுக்கவும் குறைந்த நேரமே செலவாகும். இதை விட கைகளால் தேய்க்கும்போது நேரம் குறைந்தாலும் முழுக்க முழுக்க மனித உழைப்பு தேவைப்படும் என்பதால் டிஷ்வாஷர்கள் தற்போது அதிகம் விற்பனையாகி வருகின்றன.

ஒரு வேளைக்கு 25 நிமிடங்கள் செலவிட்டு பாத்திரங்களை தேய்ப்பதாக இருந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரங்கள் பாத்திரங்கள் தேய்க்கவே செலவாகும்.

எனவே, பல விவரங்களையும் அலசி ஆராயும்போது டிஷ்வாஷர்கள் வீடுகளுக்குத் தேவையான ஒன்றாக மாறி வருகிறது.

Summary

Dishwashers equipped with sensor features have arrived!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.