ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வந்துவிட்டது பாத்திரங்களைத் தேய்க்கும் ஸ்கிரப் துணி! விலையோ மலிவு!

விலை மலிவாக வந்துவிட்டது பாத்திரங்களைத் தேய்க்கும் ஸ்கிரப் துணி

 ஸ்கிரப் துணி

ஸ்கிரப் துணி - x

Published On :29 ஜூலை 2026, 5:44 pm IST

வீட்டில் சமையல் பாத்திரங்களைத் தேய்க்க இதுவரை இரும்பு ஸ்கிரப், பச்சை நிற ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தவர்களுக்காகவே சாமான் தேய்க்கும் ஸ்கிரப் துணி வந்துவிட்டது.

விலையோ மிகவும் மலிவு. ஒரு ஸ்கிரப்பை கைக்குட்டை வடிவில் தயாரித்த புத்திசாலிக்கு வீட்டில் பாத்திரங்களைத் தேய்த்தே பல மணி நேரங்களை செலவிடுவோர் நிச்சயம் பாராட்டு மழையைப் பொழிவார்கள்.

கைக்கு எந்த சிராய்ப்பையும் ஏற்படுத்தாமல், எந்த வகையான பாத்திரங்களையும், கேஸ் ஸ்டவ், சமையல் மேடை, குழாய்களைக் கூட எளிதாகத் தேய்க்க முடிகிறது இந்த ஸ்கிரப் துணியால்.

விலை கிட்டத்தட்ட ரூ.7 முதல் கிடைக்கிறது. தற்போதைக்கு மிகப்பெரிய கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இ-வணிக செயலிகளிலும் பத்து ஸ்கிரப் என்ற அளவில் கிடைக்கிறது.

டம்ளர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்களைத் தேய்க்க இதுவரை எந்த ஸ்கிரப்பும் சரியாக பயன்படாத நிலையில், இந்த துணி போன்ற ஸ்கிரப் நன்றாகவே பயன்படுகிறது. இவை பாத்திரங்களில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, பயன்படுத்தவும் பாதுகாப்பானதாக உள்ளது.

அதிகப்படியான கறைகளை நீக்க இரும்பு ஸ்கிரப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற அனைத்துப் பாத்திரங்களுக்கும் இந்த ஸ்கிரப் போதுமானதுதான்.

ஈரம் போகாமல் அப்படியே இருக்கும் ஸ்கிரப்புகளுக்கு மத்தியில் இது மிக எளிதாக அலசி காய வைத்துக் கொள்ளலாம். எனவே, கிருமிகள் வளருமே என்ற பயமும் இல்லை. பயன்படுத்திப் பார்க்கலாம்.

Summary

The dish-scrubbing cloth is here! And it's affordably priced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.