இது ஆண்களுக்காக.....
பெண்கள் மட்டும் தான் தங்களை அழகுபடுத்திக் கொள்ள முடியுமா என்ன? ஆண்கள் அவர்களுக்கு போட்டியாக


பெண்கள் மட்டும் தான் தங்களை அழகுபடுத்திக் கொள்ள முடியுமா என்ன? ஆண்கள் அவர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கி கலக்கலாம். அதற்கு முதல் தேவை அவர்கள் அதற்கான சிரத்தை எடுக்கவேண்டும். ஆரோக்கியமும் சுத்தமும் பெண்களைப் போல ஆண்களுக்கும் மிகவும் முக்கியம். உங்களை சரியாக பராமரிக்காவிட்டால் அதுவே உங்களைப் பற்றிய அபிப்ராய பேதத்துக்கு வழிவகுத்துவிடக் கூடும். பளிச் சுத்தத்துடனும் மனம் மயக்கும் சுகந்தத்துடன் இருந்தீர்கள் என்றால் அதுவே உங்களை உயர்த்திக் காட்டும்.
ரொபொஸோவின் ஃபேஷன் டைரக்டர் சமர்பிதா தாஸ்குப்தா ஆண்களுக்கு இந்த விஷயத்தில் சில டிப்ஸுகளை அள்ளித் தருகிறார்.
சாதாரண சோப்பை பயன்படுத்துவதை விட சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கும் சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஆண்களைப் பொருத்தவரை தலைமுடி பராமரிப்பு மிகவும் முக்கியம். முதலில் ஆயில் மசாஜ் எடுத்த பின்னர் தரமான ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். அதனுடன் அதிக கெமிக்கல் இல்லாத கண்டிஷனரையும் பயன்படுத்தலாம். இது தலைமுடிப் பராமரிப்பின் அடிப்படை. இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் தலைமுடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பூவை கண்டுபிடித்து அதைப் பயன்படுத்த வேண்டும். தலைமுடிக்கு ஜெல் பயன்படுத்துவது பழைய பழக்கம். தற்போது அதற்கென சீரம் வந்துவிட்டது. அது தலைமுடியை பாதுகாப்பதுடன் ஸ்டைலாக வைத்திருக்கவும் பயன்படும்.
நீங்கள் சற்று நீளமான தாடி வைத்திருப்பவர் எனில் அதை சுத்தமாக அரிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும். அதற்கும் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். ப்ரென்ச் தாடி அல்லது சிறிய தாடிக்கு தேவையில்லை. ஆனால் தாடியை எப்போதும் பளபளப்பாக ஆரோக்கியமாக வைத்திருப்பது நல்லது.
வெயில் காலங்களில் உடல் துர்நாற்றம் ஒரு முக்கியமான பிரச்னை. எனவே அதைத் தவிர்க்க தகுந்த டியோடரண்டுகளைப் பயன்படுத்துங்கள். முக்கியமான இடங்களுக்குச் செல்லும் போது பாடி ஸ்ப்ரே, செண்ட் பயன்படுத்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...