மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த குபேந்திரனை, திங்கள்கிழமை அதிகாலை முத்துமணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனின் உடலை முதல் தளத்தில் இருந்து கீழே வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
சிறுவன் கொலைக்கான முதற்கட்ட விசாரணையில், சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையுண்ட சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கொலை செய்த கும்பலை சேர்ந்த முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Summary
Regarding the hacking to death of a boy near the Madurai Meenakshi Amman Temple...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மதுரை வி.மீனாட்சிபுரம் கோயிலில் பிரதிஷ்டை

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - புகைப்படங்கள்







