தமிழ் செய்திகள்
பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி இன்று (மே 11) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழகத்தின் 17 வது சட்டப்பேரவை இன்று (மே 11) கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அந்தவகையில் செளமியா அன்புமணி தருமபுரி எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
Summary
Sowmya Anbumani PMK General Council Chairperson
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









