தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தொடக்கம்!

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது குறித்து...

News image

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது - டிஎன்எஸ்

Updated On :8 மே 2026, 10:10 am IST

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வியாழக்கிழமை(மே 7) இரவு 10 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா மே.19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீபார்வதிக்கு ஏற்பட்ட நடனப்போட்டியில், நடராஜப் பெருமான் ஊர்தவ தாண்டவத்தை ஆட முடியாமல் ஸ்ரீபார்வதி வெகுண்டு சிதம்பரம் வடதிசை எல்லையில் ஸ்ரீஎல்லைக்காளி எனும் தில்லைக்காளியாக வீற்றுள்ளார் என வரலாறு கூறுகிறது. ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதேவியை பூஜிக்க, ஸ்ரீபார்வதி பிரம்மனின் பூஜைக்கு மனமுவந்து சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் நோக்கத்துடன் கோயில் ஸ்ரீபிரம்ம சாமுண்டீஸ்வரி ஸ்ரீதில்லையம்மன் என்ற திருப்பெயருடனும் இந்த கோயிலில் வீற்றுள்ளார்.

தீயவைகளை அழிக்கும் கோபசக்தியாக தில்லைக்காளியும், நல்லவைகளை அருளும் சாந்த சொருபிணியாக வீற்றிருக்கும் தில்லைக்காளி அம்மன் கோயில் வைகாசி திருவிழா வியாழக்கிழமை இரவு(மே 7) விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

மே.8-ஆம் தேதி சூரிய பிரபை வாகன வீதிஉலா, 9-ஆம் தேதி சந்திரபிரபை வாகன வீதிஉலா, 10-ம் தேதி பூதகி வாகன வீதிஉலா, 11-ஆம் தேதி தெருவடைச்சான் (அன்ன வாகனம்) வீதிஉலா, 12-ஆம் தேதி காமதேனு வாகன வீதிஉலா, 13-ஆம் தேதி கைலாய வாகன வீதிஉலா, 14-ஆம் தேதி ரிஷப வாகன வீதிஉலா, மே.15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா, மே.16-ஆம் தேதி சிவப்பிரியையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மே.17 ஆம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, மே.18-ஆம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது. மே.19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேணு.நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

Summary

Regarding the commencement of the Vaikasi Festival at the renowned Chidambaram Thillaikali Amman Temple, which began on Thursday night at 10 PM with the ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.