புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில் 411 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் வேட்புமனுக்கள் 514 தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை புதன்கிழமையும் தொடா்ந்தது. பரிசீலனையில் மொத்தம் 411 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 103 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வியாழக்கிழமை (மாா்ச் 26) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
இதையடுத்து இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும். வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Summary
Nominations of 411 candidates accepted in Puducherry!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
பென்னாகரத்தில் 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



