மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்ற அனைவருக்கும் ஹோா்முஸ் நீரிணை திறந்திருக்கும்: அப்பாஸ் அராக்சி

உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹோா்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கப்பல்கள் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என்று அப்பாஸ் அராக்சி எச்சரித்தது குறித்து...

News image

அப்பாஸ் அராக்சி - கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2026, 8:01 am

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலைத் தொடங்கியது முதல், ஈரானுக்கும், ஓமன் நாட்டுக்கும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நிற்பதால் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்து முடங்கி எரிபொருள் தட்​டுப்​பாடு நில​வு​கிறது.

இந்திய தேசியக் கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனிடையே, நீரிணையின் கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 இந்திய கப்பல்களில் ஒன்று, நீரிணையை வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடந்து சென்றது. இந்த கப்பல் ஆப்பிரிக்க நாட்டுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்றது.

இந்தச் சூழலில் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள பிற இந்திய கப்பல்களில் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு எல்பிஜி கப்பல்கள் சனிக்கிழமை காலை ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தன. இவற்றில் 92,700 டன் எல்பிஜியுடன் ஷிவாலிக் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை மாா்ச் 16-ஆம் தேதியும், நந்தா தேவி கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை மாா்ச் 17-ஆம் தேதியும் வந்தடையவுள்ளன.

இதுதவிர மேற்குப் பகுதியில் 6 எல்பிஜி கப்பல்கள், ஒரு இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கப்பல், ஒரு ரசாயன கப்பல், 4 கச்சா எண்ணெய்க் கப்பல்கள், 3 கன்டெய்னா் கப்பல்கள், 2 சரக்குக் கப்பல்கள், பராமரிப்பில் 3 கப்பல்கள் உள்பட 22 கப்பல்கள் சிக்கியுள்ளன. இதில் 611 மாலுமிகள் உள்ளனா். இத்துடன் ஹோா்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் 76 மாலுமிகளுடன் சிக்கியுள்ள 3 கப்பல்களையும் மீட்கும் நடவடிக்கையை இந்தியா அரசு மேற்கொண்டு வருகிறது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு ஹோா்முஸ் நீரிணை திறந்தே உள்ளது

இந்த நிலையில், ஹோா்முஸ் நீரிணை உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு திறந்தே இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கப்பல்கள் முக்கியமான கடல் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை - மேற்கு ஆசிய பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் சர்வதேச போக்குவரத்திற்கு மூடப்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களுக்கு மட்டுமே இந்த பாதை மூடப்பட்டுள்ளது என்று அராக்சி செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

மேற்கு ஆசிய பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு காரணமாக சில கப்பல் நிறுவனங்கள் ஹோா்முஸ் நீரிணை தவிர்த்து வருவதாகக் கூறப்பட்டாலும், மற்ற கப்பல்கள் தொடர்ந்து இந்த பாதையைப் பயன்படுத்தி வருகின்றன என்று அவர் கூறினார். அத்தகைய கவலைகள் ஈரானின் நடவடிக்கைகளுடன் சம்மந்தமில்லாதவை. ஹோர்முஸ் நீரிணை வழியாக இன்னும் பல டேங்கர் கப்பல்களும், பிற கப்பல்களும் சென்று கொண்டுதான் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும், ஈரான் குறித்த யூகங்கங்களுக்கு பதிலளித்த அராக்சி, சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக சொல்லப்படும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் கருத்தை நிராகரித்ததுடன், நாட்டின் உச்ச தலைவர் நலமாகவும் ஆற்றலோடு இருப்பதாக தெரிவித்தார்.

ஈரானின் அரசியல் அமைப்பு மீள்தன்மை கொண்டது என்றும், எந்தவொரு தனிநபரையும் சார்ந்து இல்லை. எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் கூறினார்.

Summary

Iranian Foreign Minister Abbas Araghchi has said that the strategic Strait of Hormuz remains open to global shipping, but warned that vessels from the United States and Israel would not be allowed to pass through the crucial maritime route

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.