தஞ்சாவூர்: தஞ்சையில் பெரிய கோயில் கோபுரம் தெரியாத அளவிற்கு வெள்ளிக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் காலையிலேயே கோபுர தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்தில் சென்றனர். வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் பகல் நேரத்தில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பநிலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
சாலையை மறைக்கும் வகையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு ஊா்ந்து சென்றன.
மேலும், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை மறைக்கும் அளவிற்கு பனிமூட்டம் இருந்ததால் காலையிலேயே கோபுர தரிசனத்தை காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நெடுஞ்சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு கடும் சிரமத்துடனே சென்றனா். நடைப்பயிற்சி செல்வோரும், அதிகாலையில் எழுந்து பல்வேறு வேலைகளுக்கு செல்வோரும் அவதிக்குள்ளாயினா். குடியிருப்பு பகுதிகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது.
Summary
Today Heavy snowfall in Thanjavur: Motorists suffer...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது: 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



