இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல் காரணமாக, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் டபோ பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 9) இரவு சந்தேகிக்கப்படும் வகையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவியது.
இந்தத் தகவலையடுத்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அந்தப் பகுதி முழுவதும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் ஏதும் வீசப்படவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேடுதல் பணியில் ராணுவம், காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை சார்ந்த வீரர்கள் ஆகியோர் இணைந்து ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், சம்பா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் உள்ள பாய் நல்லா, லாலா சாக் மற்றும் மலானி ஆகிய இடங்களில் காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோதனைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Summary
Security has been beefed up and a search operation has been launched in earnest due to Pakistani drone intrusion along the Indian border.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

எல்லையில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி: காஷ்மீரில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



