லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து! 2 வீரர்கள் பலி!

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 2 வீரர்கள் பலியான சம்பவம் குறித்து...

News image

ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபத்து - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 6:56 am

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ராணுவத்தின் தாமதமான அறிக்கையின் படி, மார்ச் 7 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசம் சுபன்சிரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்திய-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரெட்டி கிராமத்திற்கு அருகில், ஆபரேஷன் ஸ்னோ லெப்பர்டின் கீழ் தங்களுடைய பணிக்காக கெலெமோவிலிருந்து டாக்ஸிங்கிற்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த வீரர்கள் 56 பீரங்கி படையணியின் கீழ் உள்ள 908 ஃபீல்ட் படைப்பிரிவைச் சேர்ந்த நைப் சுபேதார் குல்வந்த் சிங் மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலியைச் சேர்ந்த 18 சீக்கிய படைப்பிரிவைச் சேர்ந்த நாயக் பிரதீப் குமார் சர்மா ஆகியோர் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Summary

The incident in Arunachal Pradesh where two soldiers were killed when an army vehicle fell into a gorge has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.