ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் பெறப்பட்டதன் பேரில் காவல்துறை ஆய்வு செய்தனர்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனையடுத்து, காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த அனைத்து அஞ்சலகங்களையும் முழுவதுமாகச் சோதனை செய்தனர்.
பன்ஸ்வாராவில், காவல்துறை மற்றும் சிஐடி குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத்தை காலி செய்து முழுமையான சோதனை நடத்தினர்.
பிகானர் மற்றும் பார்மரில் உள்ள முக்கிய அஞ்சலகத்தில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால் அவையனைத்தும் புரளிகளாகவே இருந்துள்ளன.
மேலும், இதே நாளில் ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் பகுதியிலும் 5 தனியார்ப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Police investigated bomb threats received at post offices in various parts of Rajasthan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



