தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல்வேறு பாதுகாப்பு முகமையினர் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறினர். மின்னஞ்சல் கிடைத்தவுடன் கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. அதன்அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் மற்றும் இதர குழுவினர் அந்தப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Multiple agencies rushed to Ramjas College of the University of Delhi on Monday after the institution received an email threatening the presence of a bomb on its premises, official sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று தில்லி சட்டப்பேரவைக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



