சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கான தேசிய மாணவர் படை என்சிசி புதிய தலைவராக கமடோர் நம்பியத் சுதீப் பொறுப்பேற்றுள்ளார்.
அதன் முன்னாள் தளபதியான கமாண்டர் ராகவ் கடற்படை மற்றும் என்சிசி-யில் நீண்ட கால பணிக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றார்.

என்சிசி புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கமடோர் நம்பியத் சுதீப்
சென்னையை தலைமையிடமாகக்கொண்ட என்சிசி இயக்குநரகம் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உட்பட) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது.
இது இப்போது 6 குழு தலைமையகங்களையும், ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை பிரிவுகள் உட்பட சுமார் 59 பிரிவுகளையும் கொண்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் கேடட்களாக சேர்ந்துள்ளனர்.
குடியரசு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் என்சிசி படைப்பிரிவுகளில் தேசிய அளவில் சிறந்து விளங்குவதற்காக இந்த இயக்குநரகம் புகழ்பெற்றது.
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞர் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்றவற்றிலும் இது புகழ்மிக்கதாகும்.
Summary
Cmde Nambiath Sudeep has taken over as the new Deputy Director General of Headquarters National Cadet Corps (NCC) Directorate of Tamil Nadu, Puducherry and Andaman Nicobar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநா் பொறுப்பேற்பு

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

பாா் கவுன்சில் தோ்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு!

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



